உள்ளூர் செய்திகள்

பரமத்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம். 

பரமத்திவேலூர் பகுதி அரசு பள்ளிகளில் போக்சோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு

Published On 2023-04-21 12:42 IST   |   Update On 2023-04-21 12:42:00 IST
  • காவல்துறை சார்பில் பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • ஆசிரி யர்கள், பணியாளர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தால் அது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காவல் துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட வேலூர், வேலூர் அனைத்து மகளிர் போலீஸ், ஜேடர்பாளையம், பரமத்தி, நல்லூர் மற்றும் வேலக வுண்டம்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மகளிர் பள்ளிகளில் காவல்துறை சார்பில் பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் அறிவுரையின் பேரில் பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமை வகித்தார்.

போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டு, மாணவிகளி டையே தாங்கள் படிக்கும் பள்ளிகளில் உள்ள ஆசிரி யர்கள், பணியாளர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தால் அது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் அந்தந்த பகுதிகளில் அடை யாளம் தெரியாத நபர்கள் சுற்றி திரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் மாணவிகளுக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த விதமான தயக்கமும் இன்றி போலீசருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

இதுபோல அந்தந்த போலீஸ் நிலைய கட்டுப் பாட்டில் உள்ள பள்ளிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை யாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News