உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி அரசு கல்லூரியில் ஆன்லைன் கிரைம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

திட்டக்குடி அரசு கல்லூரியில் ஆன்லைன் கிரைம் குறித்து விழிப்புணர்வு

Published On 2023-08-17 13:02 IST   |   Update On 2023-08-17 13:02:00 IST
  • புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்த கூடாது.
  • குறுச்செய்தியில் வரும் தேவையற்ற லிங்க்கை ஓபன் செய்ய கூடாது.

கடலூர்:

திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வகையான ஆன்லைன் சைபர் கிரைம் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமை தாங்கினார். பின்னர் கல்வியின் மதிப்பு மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தாமல் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். மேலும் புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்த கூடாது. தேவையற்ற எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்பினை தவிர்த்தல். குறுச்செய்தியில் வரும் தேவையற்ற லிங்க்கை ஓபன் செய்ய கூடாது. உங்களின் செல்போன் எண்ணில் வரும் ரகசிய எண்ணை எக்காரணம் கொண்டும் யாரிடமும் சொல்லாமல் இருக்கவும், இணையவழி குற்றம் தொடர்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் எனவும், இணையவழி குற்றங்கள் தடுப்பு சம்பந்தமாக உங்களது பெற்றோர்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags:    

Similar News