உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு

Published On 2023-04-07 15:22 IST   |   Update On 2023-04-07 15:22:00 IST
  • எவ்வித அச்சமுமின்றி ஆசிரியர்களிடமோ அல்லது போலீசாரிடமோ தெரிவிக்க வேண்டும்.
  • போதைப் பொருட்களால் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிப்பதோடு, அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகில் உள்ள ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், போதைப் பொருள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இப்பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதாராணி தொடங்கி வைத்து பேசுகை யில், பள்ளி மாணவர்கள், பள்ளிப் பருவத்தில் தேவையில்லாத சமூக வலைதளங்கள் மற்றும் போதை வஸ்து போன்ற பழக்கங்களுக்கு உள்ளாகக் கூடாது.

கஞ்சா உள்பட போதைப் பொருட்கள் பயன்படுத்தும் சகமாணவர்கள் அல்லது பயன்படுத்த வற்புறுத்தும் மாணவர்கள் குறித்த தகவலை எவ்வித அச்சமுமின்றி ஆசிரியர்களிடமோ அல்லது போலீசாரிடமோ தெரிவிக்க வேண்டும். போதைப் பொருட்களால் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிப்பதோடு, அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் போதைப் பொருட்களை பயன்படு த்தக்கூடாது என்றார்.

இப்பேரணி மேல்சோ மார்பேட்டை வழியாக கடைத்தெருவரை சென்று மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது. இதில், உதவி தலைமை ஆசிரியர் விஜய், போதைப் பொருள் தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ராம்பிரசாத் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News