கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது குறித்து விளக்கம்.
கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு
- கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது குறித்து விளக்கினர்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் சாத்தி தொண்டு நிறுவனம் இணைந்து மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது குறித்தும், அரசு அறிவுறுத்தும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம், மருத்துவ அலுவலர் சேது, கிராம சுகாதார செவிலியர் மாலதி, சாத்தி தொண்டு நிறுவன மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் மற்றும் கொரோனா தடுப்பூசி ஊக்குவிப்பாளர்கள் நித்தேஷ், பிரபாகரன், அன்னலட்சுமி, ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.