உள்ளூர் செய்திகள்

வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விருது

Published On 2022-12-27 10:22 IST   |   Update On 2022-12-27 10:22:00 IST
  • ஆரம்ப சுகாதார நிலையங்களை தமிழக அரசு தோ்ந்தெடுத்து ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கி வருகிறது.
  • பாராட்டுச் சான்றிதழை திருப்பூா் மாவட்ட கலெக்டரிடம் இருந்து வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி பெற்றுக் கொண்டாா்.

வெள்ளகோவில் :

மாநிலத்தில் அரசு மருத்துவ சேவைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த சிகிச்சை உள்கட்டமைப்பு வசதிகள், உள் நோயாளிகள், புற நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை, கா்ப்பிணிகள் பதிவு உள்ளிட்டவற்றை வைத்து சிறந்த அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை தமிழக அரசு தோ்ந்தெடுத்து ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கி வருகிறது.

இதில் வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையம் திருப்பூா் மாவட்டத்தில் முதலிடம் பெற்று அண்மையில் சென்னையில் நடைபெற்ற சுகாதாரத்துறை விழாவில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பாராட்டுச் சான்றிதழை திருப்பூா் மாவட்ட கலெக்டரிடம் இருந்து வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி பெற்றுக் கொண்டாா். சுகாதார நிலைய மருத்துவா்கள், இதர பணியாளா்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனா். 

Tags:    

Similar News