உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

ரத்ததான முகாமில் சாதனை படைத்தவர்களுக்கு விருது

Published On 2023-01-17 15:52 IST   |   Update On 2023-01-17 15:52:00 IST
  • தேசிய அளவில் வெற்றி பெற்ற இளைஞர்களை ஊக்குவித்து விருது வழங்கினார்.
  • விழாவில் இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.

சுவாமிமலை:

இந்திய அரசு நேருயுவகேந்திரா தஞ்சாவூர் சார்பில் விவேகானந்தா கலாம் பவுண்டேசன் மற்றும் கும்பகோணம் ரெட்கிராஸ் இணைந்து சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன் வழிகாட்டுதல் படி ரத்த தான முகாம் மற்றும் தேசிய அளவில் சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விவேகானந்தா கலாம் பவுண்டேசன் தலைவர் கணேசன் வரவேற்றார்.

நேருயுவகேந்தி ராவின் துணை இயக்குநர் திருநீலகண்டன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் ஸ்ரீராம கிருஷ்ணர் மடத்தலைவர் ஸ்ரீவிமூர்தானந்தா மஹரிஷி முன்னிலை வகித்தார்.

கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய அளவில் வெற்றி பெற்ற இளைஞர்களை ஊக்குவித்து விருது வழங்கினார்.

கும்பகோணம் ரெட்கிராஸ் துணை தலைவர் ரோசரியோ வாழ்த்துரை வழங்கினார்.

கும்பகோணம் போர்டர் ஹால் நிர்வாகிகள் ராமமூர்த்தி, விஜயகுமார், ரவிராமன் கும்பகோணம் ரெட்கிராஸ் தொண்டர்கள் சிவக்குமார், சபாபதி கலந்து கொண்டனர்.

கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர்சிவந்தி, சலீம் ஆகியோர் முகாமில் ரத்த தான ஏற்பாடுகள் செய்திருந்தனர். விழாவில் இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர். இறுதியாக டாக்டர் சலீம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News