உள்ளூர் செய்திகள்

பேச்சிமுத்து குடும்பத்தினருக்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆறுதல் கூறிய காட்சி.

அம்பையில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்தினருக்கு ஆவுடையப்பன் நேரில் ஆறுதல்

Published On 2023-10-31 13:50 IST   |   Update On 2023-10-31 13:50:00 IST
  • பேச்சிமுத்து, பேரின்பராஜ் 2 பேரும் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர்.
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து(வயது 55). விவசாயி. இவரது மகன் பேரின்பராஜ். சம்பவத்தன்று 2 பேரும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர்.

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டார். உயிரிழந்த பேச்சிமுத்து தி.மு.க. முன்னாள் கிளை செயலாளர் ஆவார். இதனால் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினரை முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆவுடையப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், அம்பை ஒன்றிய செயலாளர் பரணி சேகர், தெற்கு பாப்பாங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆறுமுகம், வைராவிகுளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாபநாசம், மாவட்ட கவுன்சிலர் அருண் தவசுபாண்டியன், அயன் சிங்கம்பட்டி ஊராட்சி செயலாளர் பூதபாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News