உள்ளூர் செய்திகள்

தஞ்சை மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

ஆவணி முதல் ஞாயிறு; இறைச்சி- மீன் கடைகள் வெறிச்சோடின

Published On 2022-08-21 09:47 GMT   |   Update On 2022-08-21 09:47 GMT
  • குறிப்பாக ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.
  • ஆவணி மாதம் முழுவதும் மாரியம்மனை வேண்டி பெரும்பாலான பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம்.

தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாதம் பிரசித்தி பெற்றது.

ஆவணி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும்.

குறிப்பாக ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.

மேலும் ஆவணி மாதம் முழுவதும் மாரியம்மனை வேண்டி பெரும்பாலான பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம்.

அதன்படி ஆவணி மாதம் தொடங்கி விட்டதால் பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்கினர். இந்த நாட்களில் விரதம் இருக்கும் பக்தர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பர்.

இதன் காரணமாக இன்று தஞ்சையில் உள்ள பெரும்பாலான இறை ச்சி, மீன் கடை களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

தஞ்சையில் உள்ள மீன் மார்க்கெட்டில் இன்று வழக்கத்தை விட குறைவான அளவிலேயே பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றதை காண முடிந்தது‌ .

இதேபோல் இறைச்சி கடைகளிலும் கூட்டம் குறைந்தது. 

Tags:    

Similar News