சின்னசேலம் அருகே ஆட்டோ டிரைவர் விபத்தில் பலி: நோயாளியை அழைக்க சென்ற போது பரிதாபம்
- அண்ணாதுரை இவர் சொந்தமாக ஆட்டோ தொழில் செய்து வருகிறார்.அண்ணாதுரை ஆட்டோவில் மருத்துவமனயைிலிருந்து டிஸ்ஜார்ஜ் ஆன கண்ணன் ,இவரோடு சிலரை ஏற்றிகொண்டு சென்றார்.
- மறவாநத்தம் பிரிவு ரோட்டில் செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக அங்குள்ள சிமெண்ட் தடுப்பு மீது ஆட்டோ மோதி விபத்தானது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள க. மாமனந்தல் கிராமத்தை சேர்ந்த லட்சுமி வயது 45 இவரது கணவர் அண்ணாதுரை இவர் சொந்தமாக ஆட்டோ தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணன் என்பவரை மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்தனர்.அண்ணாதுரை ஆட்டோவில் கண்ணன் இவரது மனைவி லட்சுமி மகன் முருகேசன் பேரன் ராமச்சந்திரன் ஆகியோர் சின்ன சேலத்திற்கு சென்றனர். அப்பொழுது மறவாநத்தம் பிரிவு ரோட்டில் செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக அங்குள்ள சிமெண்ட் தடுப்பு மீது ஆட்டோ மோதி விபத்தானது. இதில் ஆட்டோ டிரைவர் அண்ணாதுரை லட்சுமி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை அடுத்து இருவரையும் சின்ன சேலம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் ஆட்டோ டிரைவர் அண்ணாதுரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.