உள்ளூர் செய்திகள்

ஆட்டோக்கள் மோதல்- 4 பேர் படுகாயம்

Published On 2022-10-21 15:58 IST   |   Update On 2022-10-21 15:58:00 IST
  • காஞ்சிபுரம்-வேலூர் நெடுஞ்சாலையில் ஒலிமுகமது பேட்டை விநாயகபுரம் பகுதியில் காஞ்சிபுரத்தில் இருந்து கீழம்பி நோக்கி பயணிகள் ஆட்டோ சென்று கொண்டிருந்தது.
  • படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பாலுச்செட்டிசத்திரம்:

காஞ்சிபுரம்-வேலூர் நெடுஞ்சாலையில் ஒலிமுகமது பேட்டை விநாயகபுரம் பகுதியில் காஞ்சிபுரத்தில் இருந்து கீழம்பி நோக்கி பயணிகள் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோவை கா சேர்ந்த பிரேம்குமார் (23) ஓட்டி சென்றார். அதே நேரத்தில் எதிரே ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த குரு (19) என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ எதிர்பாரதவிதமாக பிரேம்குமார் ஓட்டிவந்த ஆட்டோவின் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர்கள் பிரேம்குமார், குரு, பயணிகள் அபூர்வம்மாள் (65), பள்ளி சிறுவன் ஒருவன் என 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும். பாலுச்செட்டி சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News