உள்ளூர் செய்திகள்

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் -பெண் உள்பட 4 பேர் கைது

Published On 2022-10-14 15:20 IST   |   Update On 2022-10-14 15:20:00 IST
  • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகில் தக்கடி-உஸ்தலஹள்ளி சாலையில் உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்இ-ன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி, கலைச்செல்வன் மற்றும் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ அளவிலான, 20 மூட்டைகளில், ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கர்நாடகாவுக்கு கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து வேனில் இருந்த மல்லஹள்ளி சிவராஜ் (25), உதுபரணி பாக்கியம் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள் போச்சம்பள்ளி அடுத்த எருமம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மரத்தடியில், 50 கிலோ அளவிலான, 14 மூட்டைகளில், 700 கிலோ ரேஷன் அரிசியுடன் நின்ற 2 பேரை சோதனை செய்தனர். அதில் அவர்கள் கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது.

இதையடுத்து ரேஷன் அரிசி கடத்திய சின்னகொத்தூர் முருகேசன் (33), இனாம்கோட்டப்பள்ளி முருகேசன் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News