உள்ளூர் செய்திகள்

மோதலை தடுக்கச் சென்ற போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்

Published On 2023-01-18 09:29 GMT   |   Update On 2023-01-18 09:29 GMT
  • 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
  • திருவிழாவுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்.

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார்.

சம்பவத்தன்று இவர் முடீஸ் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஈட்டியார் எஸ்டேட் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்.

கோவிலில் நள்ளிரவு பன்றி குத்தும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கக்கன்காலனியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 28), அண்ணா நகரை சேர்ந்த கார்த்திக் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மோதிக்கொண்டனர்.

இதனை பார்த்த பணியில் இருந்த போலீஸ் ஏட்டு சுரேஷ்குமார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து போலீஸ்காரர் சட்டையை பிடித்து இழுத்து அவரது கன்னத்தில் தாக்கினர்.

இது குறித்து போலீஸ் ஏட்டு சுரேஷ்குமார் முடீஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற போலீஸ் ஏட்டுவை தாக்கிய தினேஷ்குமார், கார்த்திக் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News