திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி உட்பட 6 பேர் மீது தாக்குதல்
- லோகேஸ்வரி பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
- அதே பகுதியை சேர்ந்த விஜி என்பவர் தெருவிளக்கை உடைத்து சேதப்படுத்தினார்.
திருவள்ளூர்:
திருவள்ளுவரை அடுத்த பழைய திருப்பாச்சூரை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் லோகேஸ்வரி பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
லோகேஸ்வரி வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த விஜி என்பவர் தெருவிளக்கை உடைத்து சேதப்படுத்தினார். மேலும் லோகேஸ்வரியை தகாத வார்த்தையால் பேசி அவர் மீதும் கல் வீசினார்.
இதனை கண்ட லோகேஸ்வரியின் தாயார் கற்பகம், உறவினர்கள் ரம்யா, துரை, சுந்தரி, ராஜேந்திரன் ஆகியோர் விஜியை கண்டித்தனர். இதில் ஏற்பட்ட மோதலில் விஜி அவரது தந்தை சண்முகம், சகோதரர் வேலு ஆகிய 3 பேரும் சேர்ந்து மாணவி லோகேஸ்வரி உள்பட 6 பேரையும் தாக்கினர். காயம் அடைந்த அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து லோகேஸ்வரி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.