அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு
- லயன் குவெஸ்ட் ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
- பயிற்சி பெற்ற ஆசிரியர் களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மத்தூர்,
அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட அரிமா சங்கங்கள் இணைந்து நடத்திய லயன் குவெஸ்ட் ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இதில் ஆசிரியர்களுக்கு வளர் இளம் பருவ திறன்கள் மற்றும் குழந்தைகளை எப்படி கையாள்வது குறித்து அரிமா ரமா ரவி பயிற்சி அளித்தார். மாவட்ட தலைவர் அரிமா சக்தி வரவேற்புரையாற்றினார், மாவட்ட ஆளுநர் அரிமா முத்தையா உரையாற்றினார்,
இந்நிகழ்விற்கு அதியமான் கல்வி நிறுவனங் களின் நிறுவனர் அரிமா சீனி.திருமால் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் சீனி.கலைமணி, சரவணகுமார் மற்றும் மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் அரிமா செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இவ்விழாவிற்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் அலுவலர் சீனி.கணபதிராமன் மற்றும் அதியமான் மேல்நிலைப்பள்ளியின் துணை முதல்வர் அபிநயா கணபதிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவுவிழாவில் முன்னாள் பன்னாட்டு இயக்குநர் அரிமா தனபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் அரிமா பாலமுருகன் நன்றியுரையாற்றினார். இதில் பயிற்சி பெற்ற ஆசிரியர் களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.