உள்ளூர் செய்திகள்

வேதாரண்யத்தில், கிளைச்சிறை அமைக்க வலியுறுத்தல்

Published On 2023-02-15 07:20 GMT   |   Update On 2023-02-15 07:20 GMT
  • வேதாரண்யத்தில் 5 போலீஸ் நிலையங்கள் இருந்தும் இதுவரை கிளைச்சிறை இல்லை.
  • 50 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை உள்ள கிளை சிறைச்சாலைக்கு செல்ல இரவு முழுவதும் பயணம்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் வேதாரண்யம், வாய்மேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு, வேட்டைக்காரன் இருப்பு ஆகிய 5 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

வேதாரண்யத்தில் கடந்த 2006 -ம் ஆண்டு முதல் மாவட்ட உரிமைகள் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தொடங்கி தற்போது முழு நேர நீதிமன்றமாக இயங்கி வருகிறது.

நாகப்பட்டினம், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட 4 இடங்களில் கிளை சிறைகள் உள்ளன.

வேதாரண்யத்தில் 5 போலீஸ் நிலையங்கள் இருந்தும் இதுவரை கிளைச்சிறை இல்லை.

வேதாரண்யத்தில் கிளைச்சிறை இல்லாததால் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினம் சிறைக்கோ அல்லது 60 கி.மீ தொலைவில் உள்ள தரங்கம்பாடி சிறைக்கோ அல்லது 100 கி.மீ. தொலைவில் உள்ள மயிலாடுதுறை சிறைக்கோ அல்லது 120 கி.மீ. தொலைவில் உள்ள சீர்காழி சிறைக்கோ குற்றவாளிகளை கொண்டு செல்லவேண்டி உள்ளது.

இதனால் போலீசார் பல சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. போலீசார் பெரும்பாலும் குற்றவாளிகளை மாலை நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்காவல் உத்தரவு பெறுகிறாா்கள்.

அப்படி உள்ள சூழ்நிலையில் வேதாரண்யத்தில் இருந்து 50 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை உள்ள கிளை சிறைச்சாலைக்கு செல்ல இரவு முழுவதும் பயணம் செய்து மறுநாள் சிறையில் குற்றவாளியை அடைத்து விட்டு பணிக்கு வருவதற்கு ஒரு நாள் ஆகிறது.

னவே, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள வேதாரண்யம் நீதிமன்றத்தை சார்ந்து வேதாரண்யம் பகுதியில் கிளை சிறை அமைக்க வேண்டும் என வக்கீல் சங்க தலைவர் பாரி பாலன் அரசுக்்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News