உள்ளூர் செய்திகள்

பேரல்களில் இருந்த சாராய ஊறல்கள் மற்றும் அடுப்புகளை உடைத்தெரியும் போலீசாரை படத்தில் காணலாம்.

கல்வராயன்மலை அருவங்காட்டில்3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்புஅடுப்புகளையும் உடைத்தெறிந்த போலீசார்

Published On 2023-11-06 09:20 GMT   |   Update On 2023-11-06 09:20 GMT
கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள அருவங்காடு தெற்கு ஓடை யில் சாராய ஊறல்கள் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கிரா மங்களில் சாராயம் காய்ச்சி விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குடிநீரை பேரல்களில் நிரப்புகின்றனர் யூரியா, மரப்பட்டை, வெல்லம் போன்ற பல்வேறு பொருட் களை பேரல் நீரில் ஊற வைக்கின்றனர்.சில நாட்கள் கழித்து பேரல்களில் ஊறிய நீரினை அடுப்பில் வைத்து காய்ச்சுகின்றனர். இது நாட்டுச் சரக்கு என்ற பெயரில் மதுப்பிரியர்களி டம் விற்கின்றனர். இது அப்பகுதியில் மட்டு மின்றி அரியலூர், விழுப்புரம், சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மாநிலத்தின் ஒரு சில இடங்க ளிலும் விற்கப்படு கிறது.

இது தொடர்பாக கள்ளக் குறிச்சி மாவட்ட போலீசா ருக்கும், கல்வராயன்மலை போலீசாருக்கும் புகார் வருவதும், இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று சாராய ஊறல்களை அழிப்ப தும் தொடர் நிகழ்வாக உள்ளது. இருந்தபோதும் இந்த சாராய ஊறல்களை வைத்திருந்தவர்கள் யார் என்பதும், அவர்கள் இன்று வரையில் கைது செய்யப் படாததும் மர்மமாகவே உள்ளது.இந்நிலையில் கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள அருவங்காடு தெற்கு ஓடை யில் சாராய ஊறல்கள் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ் உத்தர வின்பேரில் கல்வராயன் இன்ஸ்பெக்டர் பால கிருஷ் ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடாத் திற்கு விரைந்து சென்றனர்.அங்கு 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 பேரல்களில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் இருந்ததை கண்டறிந்தனர். உடனடியாக அதனை அங்கேயே கொட்டி அழித்தனர். மேலும், இதனை காய்ச்சு வதற்காக வைக்கப்பட்டி ருந்த அடுப்பு, ஊறல்கள் செய்வதற்கான மூலப் பொருட்கள் போன்ற வற்றையும் அழித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சாராய ஊற லை வைத்திருந்தவர்யார் என்பது குறித்து விசா ரணை நடத்தி வருகின்ற னர். மேலும், அடையாளம் தெரியாத அந்த நபரை வலை வீசி தேடி வருகின்ற னர்.

Tags:    

Similar News