உள்ளூர் செய்திகள்

பெங்களூரிலிருந்து பழங்களை ஏற்றி வந்த லாரி கடலூர் சாவடியில் தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

கடலூர் சாவடியில் சாலையின் நடுவே தடுப்பு கட்டையில் மோதி லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

Published On 2023-05-09 07:37 GMT   |   Update On 2023-05-09 07:37 GMT
  • சரவணன் (வயது 31) லாரி டிரைவர். நேற்று இரவு பெங்களூரில் இருந்து பழங்களை ஏற்றிக் கொண்டு கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை அங்கிருந்த தடுப்பு கட்டையில் லாரி மோதி பலத்த சத்தத்துடன் சாலையில் கவிழ்ந்தது‌.
  • இந்த விபத்தில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் சரவணன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

கடலூர்:

பெங்களூரில் இருந்து பழங்களை ஏற்றி வந்த லாரி, கடலூர் சாவடியில் உள்ள ஒரு தடுப்பு கட்டை யில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர். திருக்கோவிலூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சரவணன் (வயது 31) லாரி டிரைவர். நேற்று இரவு பெங்களூரில் இருந்து பழங்களை ஏற்றிக் கொண்டு கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது இன்று அதிகாலை கடலூர் சாவடியில் வந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த தடுப்பு கட்டை யில் லாரி மோதி பலத்த சத்தத்துடன் சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியின் முன்பக்க சக்கரங்கள் உடைந்தன. மேலும் லாரியும் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் சரவணன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.      இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் சாவடியில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருவ தால் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News