உள்ளூர் செய்திகள்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் படிவத்தினை பேரூராட்சித் தலைவர் கருணாநிதி வழங்கிய போது எடுத்த படம்.

பொத்தனூர்பேரூராட்சி அலுவலகத்தில் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைக்கும் படிவம் வழங்கல்

Published On 2022-08-26 10:50 GMT   |   Update On 2022-08-26 10:50 GMT
  • வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் படிவம் 6 பி‌-யை வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கும் பணி நடைபெற்றது.
  • இந்த பணியை பேரூராட்சி தலைவர் கருணாநிதி, பேரூ ராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூ ராட்சியில் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் படிவம் 6 பி‌-.யை வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை பேரூராட்சி தலைவர் கருணாநிதி, பேரூ ராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணை, வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ள படிவம் 6 பி-யை பூர்த்தி செய்து தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்க அலுவலர்களிடமும், அந்தந்த பகுதி பேரூராட்சி அலுவலகம் அல்லது கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு சென்று ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

பொத்தனூர் பேரூ ராட்சிஅலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி யில் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பரசு, இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், வார்டு கவுன்சிலர்கள் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News