உள்ளூர் செய்திகள்

நாம் தமிழர் கட்சியினர் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

நாகையில், மறைமலை அடிகளாருக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்

Published On 2023-09-16 15:07 IST   |   Update On 2023-09-16 15:07:00 IST
  • மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பன், அவரது மனைவி காந்திமதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
  • நாகையில் மணிமண்டபம் கட்டி அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

நாகப்பட்டினம்:

தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின் 74-வது நினைவு தினம் அவர் பிறந்த ஊரான நாகையில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நாகை ரெயில்வே நிலையத்திற்கு எதிரே உள்ள மறைமலை அடிகளாரின் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் தஞ்சாவூரில் வசிக்கும் மறைமலை அடிகளாரின் மகன் 76 வயதான பச்சையப்பன் , அவரது மனைவி காந்திமதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இதேப்போல் நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

அப்போது தமிழை வளர்த்த மறைமலை அடிகளாருக்கு நாகையில் மணிமண்டபம் கட்டி அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பன், நாம் தமிழர் கட்சி நாகை பாராளுமன்ற மண்டல ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் அற்புதராஜ் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் நாகை மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் மதியழகன், நாகை தொகுதி செயலாளர் ஆதித்தன், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பழனிவேல், தமிழர் மீட்சி பாசறை மாவட்ட தலைவர் மதிவாணன், நாகை சட்டமன்ற தொகுதி தலைவர் ராஜேஷ், பொருளாளர் நாகராஜன், கீழ்வேளூர் தொகுதி தலைவர் அருள் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News