உள்ளூர் செய்திகள்

புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

கெரிகேப்பள்ளியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

Published On 2022-08-16 15:55 IST   |   Update On 2022-08-16 15:55:00 IST
  • மலை கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ்சேவை புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
  • நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கெரிகேப்பள்ளி கிராமத்தில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடந்தது.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த புதிய திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மக்களை தேடி மருத்துவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ்சேவை புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், தோட்டக்கலைத்துறை சார்பாக முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைக்க காய்கறி விதைகள் வழங்குதல் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மதின் இணைப்பு வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில்சார் கடனுதவிகள் வழங்குதல், மீண்டும் மஞ்சள் பை, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தாது உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை திறப்பு, இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

இதே போல், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், பிற துறை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த புகைப்பட கண்காட்சியினை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பார்வையிட்டனர். 

Tags:    

Similar News