உள்ளூர் செய்திகள்

கபிலர்மலையில்மின் தடைக்கு நிரந்தர தீர்வு காண விவசாயிகள் கோரிக்கை

Published On 2023-04-22 14:42 IST   |   Update On 2023-04-22 14:42:00 IST
  • கபிலர்மலை துணை மின் நிலையத்தில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
  • விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு பகல் மற்றும் இரவில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்ப டுகின்றனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்தில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளது. மேலும் யு.பி.எஸ். போடாத வீட்டில் உள்ள பொதுமக்கள் கொசுக்கடியால் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர்.

விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு பகல் மற்றும் இரவில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்ப டுகின்றனர். கபிலர் மலை யில் இருந்துவரும் மின்சார கம்பிகள் தென்னந்தோப்பு கள் வழியாக வருவதால் அடிக்கடி தென்னை மட்டைகள் விழுந்து மின்தடை ஏற்படாதாவும் உடனடியாக தீர்வு காண மின்சார வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அதன் காரணமாகவே மின் நிறுத்தம் சரி செய்ய முடியாமல் நீண்ட நேரம் ஆவதாகவும் மின்வாரிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே கபிலர் மலையிலிருந்து கிராம பகுதிகளுக்கு மின்கம்பிகள் மூலம் மின்விநியோகம் செய்வதை மாற்று ஏற்பாடு செய்து மின்சாரம் தடை யில்லாமல் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், விவசாயிகள், வணி கர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News