உள்ளூர் செய்திகள்

தேவர்சோலையில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு

Published On 2022-12-18 14:16 IST   |   Update On 2022-12-18 14:16:00 IST
  • பேருராட்சி தலைவர் வள்ளி, செயல்அலுவலர் முகம்மது இப்ராகிம் ஆகியோருடன் கூட்டாக ஆய்வு மேற்கொண்டார்.
  • துப்புரவு பணியினையும், ஆலம்வயல் பகுதியில் நடைபெற்ற வரிவசூல் பணியினை ஆய்வு செய்தார்

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இப்ராகிம்ஷா பேருராட்சியில் நடைபெறும் அனைத்து திட்ட பணிகளையும் உதவி செயற்பொறியாளர், பேருராட்சி தலைவர் வள்ளி, செயல்அலுவலர் முகம்மது இப்ராகிம் ஆகியோருடன் கூட்டாக ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது துணைத்தலைவர் யூனுஸ் உள்பட அனைத்து உறுப்பினர்களும் இருந்தனர்பாடந்துறை பகுதியில் நடைபெற்ற சிறப்பு துப்புரவு பணியினையும், ஆலம்வயல் பகுதியில் நடைபெற்ற வரிவசூல் பணியினை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து தேவர்சோலை பேரூராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணியினை பார்வையிட்டு இம்மாத இறுதியில் புதியபஸ் நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி தலைவர் வள்ளி மற்றும் செயல்அலுவலர் முகம்மது இப்ராகிம் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நபார்டு திட்ட பணியினை ஆய்வு செய்து உடன் முடித்திட இளநிலை பொறியாளர் வின்சென்ட் மற்றும் சேகர் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News