உறவினர்கள் வீட்டை பூட்டியதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவி- தாயுடன் கலெக்டர் அலுவலகத்தில் புகார்
- எங்கள் வீட்டை பூட்டி விட்டதால் நாங்கள் தங்க இடமின்றி தவிக்கிறோம்.
- வீட்டை பூட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கொத்த கிருஷ்ணப்பள்ளியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவி விசாலினி(16) நேற்று தனது தாயுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தைக்கு பூர்வீக சொத்து பாகம் பிரித்து கொடுக்கப்பட்டது. ஆனால் உறவினர்கள் சிலர் எனது தந்தையின் சொத்தை அபகரிக்கும் நோக்கில் தகராறு செய்து வருகிறார்கள். கடந்த வாரம் எனது தந்தையை தாக்கினார்கள். இதனால் அவரை நாங்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.
மேலும் அவர்கள் எங்கள் வீட்டை பூட்டி விட்டதால் நாங்கள் தங்க இடமின்றி தவிக்கிறோம். எங்களின் துணிகள், புத்தகங்கள் வீட்டிற்குள் உள்ளது. இதனால் நானும், எனது தம்பியும் பள்ளி செல்ல முடியாமல் உள்ளோம். எனவே எங்கள் வீட்டை பூட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுதுது எங்களை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.