உள்ளூர் செய்திகள்

அம்பேத்கர் நகரில் பஸ்கள் நின்று செல்லும் காட்சி.

தளவாய்புரம் பஞ்சாயத்து சார்பில் அம்பேத்கர் நகரில் பஸ் நின்று செல்ல ஏற்பாடு

Published On 2022-06-27 14:51 IST   |   Update On 2022-06-27 14:51:00 IST
  • அம்பேத்கர் நகரில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
  • பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் முயற்சியால் தற்போது அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன.

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள தளவாய்புரம் பஞ்சாயத்துக்குட்பட்ட அம்பேத்கர் நகரில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 33 வருடங்களாக இந்த ஊர் பொதுமக்கள் வெளியூர் செல்ல அருகில் உள்ள தளவாய்புரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்து தங்களது போக்குவரத்து பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதனால் மாணவர்கள், கூலி தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். பலமுறை அம்பேத்கர் நகரில் பஸ் நின்று செல்ல மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற நிலையில் தளவாய்பு ரம் பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் தீவிர முயற்சியால் தற்போது அம்பேத்கர் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன.

கடந்த 33 வருடங்களாக நிறைவேறாத மக்களின் கோரிக்கையை பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் நிறைவேற்றி வைத்துள்ளதாக இப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News