உள்ளூர் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

Update: 2023-03-24 06:45 GMT
  • இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
  • 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார்

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் மகள் மோகனா(வயது 21). இவர் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News