- கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருவதால் மன உளைச்சல்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
உடையார்பாளையம்,
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கீரமங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த அண்ணாதுரை மனைவி ஜெயக்கொடி(55). இவர்களது மகள் திவ்யா(25). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடையார்பாளையம் கைகல நாட்டார் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்று, பவின்ராஜ்(7) என்ற மகன் உள்ளார். திவ்யாவின் கணவர் செல்வராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் திவ்யா மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் தனது வீட்டில் இருந்த போது மண்ணெண்ணெய் தானே ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் காயமடைந்த திவ்யா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.