உள்ளூர் செய்திகள்
பெண்கள் ஊராட்சி மன்றம் முற்றுகை
காலி குடங்களுடன் பெண்கள் ஊராட்சி மன்றம் முற்றுகை போராட்டம்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் துளாரக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு தெரு, ரோட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளது. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக தண்ணீர் சரிவர வரவில்லை. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பலமுறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முற்றுகையிட்ட பெண்களிடம், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், துணைத் தலைவர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பெண்களின் முற்றுகை போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.