உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் அரசு பணியாளர்களுக்கான பயிற்சி

Published On 2023-03-04 12:50 IST   |   Update On 2023-03-04 12:50:00 IST
  • அரியலூர் மாவட்டத்தில் அரசு பணியாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது
  • அரசுப் பணியாளர்கள் அனைவரும் அரசாணைகளுக்கு கட்டுப்பட்டவர்கள் என்றார்

அரியலூர்

அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் துரை தம்புசாமி ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 3-வது நாளாக நடைபெற்ற அரசு பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் அவர் கலந்து கொண்டு மேலும் பேசுகையில்,அரசுப் பணியாளர்கள் அனைவரும் அரசாணைகளுக்கு கட்டுப்பட்டவர்கள்.

அதன்படி அலுவலக நடைமுறைகளை தமிழில் செயல்படுத்த வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். தமிழில் உரையாடல் வேண்டும். கோப்புகைளை தமிழிலில் கையாள வேண்டும் என்றார். தொடர்ந்து அவர், அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தார்.அரியலூர் அரசு கலைக் கல்லூரி தமிழத் துறை உதவிப் பேராசிரியர் க.தமிழ்மாறன் கலந்து கொண்டு, மொழிப் பயிற்சி, மொழிபெயர்ப்பும், கலைச்சொல்லாக்கமும் என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். கோப்புகளில் பிற மொழிகளைக் கலக்காமல் தூய தமிழில் கையாள வேண்டுமேன்றும், வார்த்தைகளை மொழி பெயர்க்கும் போது அதன் பொருள் மாறாமல் மொழி பெயர்க்க வேண்டும் என்றார். முன்னதாக தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) க.சித்ரா வரவேற்றார்.


Tags:    

Similar News