உள்ளூர் செய்திகள்

வழிபறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

Published On 2023-04-05 12:40 IST   |   Update On 2023-04-05 12:40:00 IST
  • கத்தியைகாட்டி மிரட்டி வழிபறி
  • புகாரில் பேரில் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்

உடையாளர் பாளையம்,

அரியலூர் மாவட்டம் தா பழூர் அருகே உள்ள கூத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் மகன் ராமதாஸ். இவர் சம்பவத்தன்று தா பழூர் திரௌபதி அம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்மநபர் ஒருவர் ராமதாசிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். பயத்தில் ராமதாஸ் சத்தம் போட்டுள்ளார். சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதை பார்த்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக ராமதாஸ் தா பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News