உள்ளூர் செய்திகள்
- மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
- அவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்சியம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோவில் தெற்கு தெருவை சேர்ந்த ராஜமோகனின் மனைவி சரிதாவை(வயது 40) பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.