உள்ளூர் செய்திகள்

கூலிதொழிலாளியை தாக்கியவர் கைது

Published On 2023-09-09 15:03 IST   |   Update On 2023-09-09 15:03:00 IST
  • கூலிதொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்
  • கீரை உதிர்ந்து வீட்டு தோட்டத்தில் கொட்டிய சம்பவம்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன்(வயது 49). கூலித்தொழிலாளி. இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் சங்கர் (40). இந்நிலையில் மதியழகனின் வீட்டு தோட்டத்தில் இருந்த முருங்கை மரத்தில் இருந்து கீரை உதிர்ந்து சங்கர் வீட்டு தோட்டத்தில் கொட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து மதியழகனிடம் சங்கர் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். முருங்கை மரத்தை வெட்டி விடுவதாக மதியழகன் கூறியபோதும், சங்கர் மதியழகனை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மதியழகன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மதியழகன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News