உள்ளூர் செய்திகள்

பாலியல் வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

Published On 2023-01-31 12:07 IST   |   Update On 2023-01-31 12:07:00 IST
  • கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை
  • 10 ஆயிரம் ரூபாய் அபராதம்

அரியலூர்,

ஜெயங்கொண்டம் அடுத்த குருவாலப்பர் கோயில் கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி மகன் விஜயகுமார்(வயது33). வாடகைக்கு ரேடியோ செட் கடை வைத்துள்ள இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் பேரில், விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர், விஜயகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.இவ்வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மகளிர் நீதிமன்றம், குற்றவாளி விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து விஜயகுமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ராஜா ஆஜராகினர்.

Tags:    

Similar News