அரியலூரில் தமிழர் நீதிக்கட்சி, ஏர் உழவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- அரியலூரில் தமிழர் நீதிக்கட்சி, ஏர் உழவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாநில மகளிரணி தலைவர் இள.கவியரசி தலைமை வகித்தார்.
அரியலூர்,
பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்த அபிநயாவை, பார்த்திபன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று சாலையின் தடுப்பு சுவற்றில், மோதச் செய்ததால், அபிநயா உயிரிழந்தார்.இந்த வழக்கு விசாரணையில், உடையார்பாளையம் போலீஸார், பார்த்திபனை கொலை வழக்கில் கைது செய்துள்ளனர். இந்நிலையில், அபிநயா கொலைக்கு நீதி கேட்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக்கோரியும், தமிழர் நீதிக்கட்சி, ஏர் உழவர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாநில மகளிரணி தலைவர் இள.கவியரசி தலைமை வகித்தார். கட்சித் தலைவர் சுபா.இளவரசன் கண்டன உரையாற்றினார். மாவட்ட மகளிரணிச் செயலாளர் கஸ்தூரி, மாநில இலக்கிய அணிச் செயலாளர் சீனி.அறிவுமழை, மாநிலப் பொருளாளர் ராமசாமி மற்றும் அல்லிநகரம் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.