உள்ளூர் செய்திகள்

தெருமுனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Published On 2022-12-16 09:33 GMT   |   Update On 2022-12-16 09:33 GMT
  • தெருமுனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது
  • மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் குறித்து

அரியலூர்:

அரியலூர் பேருந்து நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற தெருமுனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கலெகடர் பெ.ரமணசரஸ்வதி தொடக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், இன்று ஆண்டிமடம் பேருந்து நிலையம், மீன்சுருட்டி பேருந்துநிலையம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் மற்றும் தா.பழூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியிகள் நடைபெறுகிறது. இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து மாற்றுத்திறனாளிகள் தெரிந்து பயன்பெற வேண்டும் என்றார்.

பின்னர், அவர் அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், வருவாய் கோட்டாட்சியர் இராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News