உள்ளூர் செய்திகள்

ஆண்டிமடத்தில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

Published On 2023-03-05 11:09 IST   |   Update On 2023-03-05 11:09:00 IST
  • ஆண்டிமடத்தில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது
  • 114 ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 1,2,3ம் வகுப்பு கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி குறுவள மைய அளவில் ஆண்டிமடம் வட்டார வள மையம் மற்றும் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் முனியம்மாள், சந்திரலேகா ஆகியோர் பயிற்சி பற்றிய கருத்துக்களை வழங்கினர்.

பயிற்சியில் கற்றல் விளைவுகள் குறித்தும், கற்றல் விளைவை நோக்கி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், கற்றல் விளைவில் ஆசிரியர்களின் பங்கு, கற்றல் விளைவு மொழிப்பாடல் பிற பாடங்கள் வேறுபாடு போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.ஆண்டிமடம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் சுரேஷ், அலெக்ஸ் மேரி செலஸ்டின், பெரியதத்ததூர் மையத்தில் சத்தியபாமா, அனிதா, மரிய அடைக்கலம், ஆண்டிமடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரமேஷ், இமாகுலேட் மேரி, சியாமாளா, அய்யூர் மையத்தில் அகிலா, பவுல் ஜெயக்குமார், கலைஞானக்கதிர், வாரியங்காவல் குருவளமைய பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர் உத்திராபதி, டேனியல் மோகன்ராஜ், ஸ்டெல்லா மேரி, அழகாபுரம் மையத்தில் ஆசைத்தம்பி, ராணி, ஆரோக்கியமேரி, மருதூர் மையத்தில் பயிற்றுனர் கார்த்திகேயன், மணிகண்டன், தோமினிக் ஜெயக்குமார் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். இதில் 114 ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News