உள்ளூர் செய்திகள்
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கருத்தரங்கம் - கண்காட்சி
- வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கருத்தரங்கம் - கண்காட்சி நடந்தது
- மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழக அரசின் மூலம் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர்ப ழனிசாமி முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி திட்டவிளக்கவுரை வழங்கினார். இறுதியாக ஜெய ங்கொண்டம் வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பிர மணியன் நன்றி கூறினார்.இந்நிகழ்வில் அனைத்து வட்டார வேளாண்மை அட்மா குழு உறுப்பினர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.