உள்ளூர் செய்திகள்

செல்போன் டவர்களில் ரூ.1 லட்சம் கருவிகள் திருட்டு

Published On 2023-10-05 09:29 IST   |   Update On 2023-10-05 09:29:00 IST
  • ஜெயங்கொண்டம் அருகே செல்போன் டவர்களில் ரூ.1 லட்சம் கருவிகள் திருட்டு
  • ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் அடுத்து உள்ள சோழமாதேவி கிராமத்தில் தனியார் செல்போன் டவர் உள்ளது. இதில்திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த அலெக்சாண்டர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இதேபோல கரடிகுளத்தில் மற்றொரு செல்போன் டவர் உள்ளது. இதில் கும்பகோணம் தாலுகா தேவனாம்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் டவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.இந்த 2 டவர்களிலும் முக்கிய கருவியான ரிமோட் ரேடியல் யூனிட்டை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு சுமார் 1 லட்சம். இதுகுறித்து அலெக்சாண்டர், பிரபாகரன் அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News