உள்ளூர் செய்திகள்

அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-05-25 11:17 IST   |   Update On 2023-05-25 11:17:00 IST
  • அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
  • அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அரியலூர்,

அரியலூர் ராம்கோ சிமென்ட் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போக்குவரத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமை வகித்து பேசுகையில், 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது, மீறி ஓட்டினால் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகனம் பறிமுதல் செய்து 3 மாத சிறை தண்டணை விதிக்கப்படும்.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம், கைப்பேசி பேசியபடி வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம், தலை கவசம் அணியாமல் வாகனம் ஒட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஐ.டி.ஐ. மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News