உள்ளூர் செய்திகள்
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
- 418 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 418 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அவர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் புதியதாக தொடங்கப்பட்டு, மூன்று மாதம் முடிவடைந்த 20 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதியாக ஒரு குழுவுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் முருகண்ணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.