உள்ளூர் செய்திகள்

அரியலூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2022-12-20 09:19 GMT   |   Update On 2022-12-20 09:19 GMT
  • பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
  • பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது

அரியலூர்:

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 481 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்று அதன் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பின்னர் அரியலூர் மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளை சிறப்பாக நிர்வகித்த கோடாலிக்கருப்பூர், அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவர் விடுதி, பட்டதாரி காப்பாளர் சந்தோஷ் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.10,000ம், செந்துறை அரசு பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவர் விடுதி, பட்டதாரி காப்பாளர், கல்யாணகுமார் என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.5,000ம், பொன்பரப்பி, அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவர் விடுதி இடைநிலைக் காப்பாளர் சுப்பிரமணியன் என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.3,000ம், பாராட்டு சான்று மற்றும் கேடயத்தினையும் கலெக்டர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Tags:    

Similar News