ஜெயங்கொண்டத்தில் பா.ம.க. சார்பில் ஆலோசனை கூட்டம்
- ஜெயங்கொண்டத்தில் பா.ம.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் மண்டபத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில தேர்தல் பணிக்குழு அன்பழகன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெயராமன், அரியலூர் மாவட்ட தலைவர் சின்னதுரை, பெரம்பலூர் மாவட்ட தலைவர் செந்தில், மாநில மாணவரணி செயலாளர் கொடுக்கூர் ஆளவந்தார், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் தர்ம.பிரகாஷ், மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் குமணன் உள்ளிட்ட ஒன்றிய நகர கிளைக் கழக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிர்வாகிகள் பொதுமக்களிடம் அவருடைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எடுத்துக் கூற வேண்டும், நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முடிவில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன் நன்றி கூறினார்.