உள்ளூர் செய்திகள்

ஓ.பி.எஸ்.-அ.ம.மு.க. கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-02 09:23 IST   |   Update On 2023-08-02 09:23:00 IST
  • அரியலூரில் ஓ.பி.எஸ்.-அ.ம.மு.க. கூட்டணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • கொடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அரியலூர்,

கொடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, அரியலூர் பேருந்து நிலையம் முன்பு ஓபிஎஸ் அணி, அமமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், திமுக தனது தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் கூறியவாறு, கொடநாடு கொலை, கொள்ள வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்.என்று கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்துக்கு ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலர் விஜயபார்த்திபன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலர் கவிதாராஜேந்திரன், அவைத் தலைவர் ரவிச்சந்திரன், நகரச் செயலர் உத்தாண்டம் கார்த்திக், மாநில துணைச் செயலர் ராஜ்குமார், ஒன்றியச் செயலாளர்கள் லோகராஜ், சுரேஷ், புகழேந்தி, அமமுக நிர்வாகி வடிவேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News