உள்ளூர் செய்திகள்

காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு

Published On 2022-10-22 07:08 GMT   |   Update On 2022-10-22 07:08 GMT
  • காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது
  • எஸ்.பி. மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

அரியலூர்

அரியலூர் மாவட்ட ஆயதப் படை மைதானத்திலுள்ள நீத்தார் நினைவுத் தூணில், வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

ராணுவம் மற்றும் காவல் துறை உள்ளிட்ட காவல் படைகளில் பணியாற்றி வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்.21 ஆம் தேதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆளிநர்கள் 63 குண்டுகள் முழங்க அங்குள்ள நீத்தார் நினைவு தூணில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இவரைத் தொடர்ந்து, ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன், ஆய்வாளர பத்மநாபன், மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காமராஜர், அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ், மாவட்ட குற்ற ஆவணக் காப்பாளர் சுரேஷ் மற்றும் அரியலூர், கீழப்பழுவூர், கயர்லாபாத் காவல் நிலைய ஆய்வாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News