உள்ளூர் செய்திகள்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி
- சிறுவலூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி
- கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன
அரியலூர்,
அரியலூர் அடுத்த சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சார்பில் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கடுகூர் ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளர் கருத்தாழன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கண்ணாடிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, செந்தில்குமரன், செவ்வேள் தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.