உள்ளூர் செய்திகள்

மரம் விழுந்து லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

Published On 2022-11-12 09:36 GMT   |   Update On 2022-11-12 09:36 GMT
  • மரம் விழுந்து லாரி ஓட்டுநர் உயிரிழப்பு
  • மரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த போது நடந்த சம்பவம்

அரியலூர்:

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டைச் சேர்ந்தவர் அரோக்கியம் மகன் செல்வம்(வயது54). இவர், திண்டுக்கல்லிலிருந்து அரியலூருக்கு லாரியில் ஜெனரேட்டர் ஏற்றி வந்துள்ளார்.ெஜயங்கொண்டம் சாலையில், ஜெனரேட்டரை பொக்லைன் இயந்திரம் மூலம் கீழே இறக்கும் போது, அருகிலிருந்து புளிய மரத்தில் பொக்லைன் இயந்திரம் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதில், புளியமரம் வேரோடு சாய்ந்தது. அப்போது, மரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த செல்வம் மரத்தின் இடிபாடுகளில் சிக்கி அதேயிடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அரியலூர் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் கயர்லாபாத் காவல் துறையினர், மரத்தை அகற்றி செல்வத்தின் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால், அரியலூர்} ஜயங்கொண்டம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News