உள்ளூர் செய்திகள்
- ஜெயங்கொண்டத்தில் மது விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை
ஜெயங்கொண்டம்,
ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் வாரச்சந்தை சந்தைகேட் பகுதிகளில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் சென்று போலீசார் சோதனை நடத்திய போது, வடக்கு தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 36)மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. ஜெயங்கொண்டம் போலீசார் அவரை கைது செய்து, 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்த விசாரித்து வருகின்றனர்.