உள்ளூர் செய்திகள்

ஆடுகள் திருடும் கந்தர்வகோட்டை கும்பல் கைது

Published On 2023-09-07 15:25 IST   |   Update On 2023-09-07 15:25:00 IST
  • ஆடுகள் திருடும் கந்தர்வகோட்டை கும்பலை போலீசார் கைது செய்தனர்.
  • 19 ஆடுகள் மீட்கப்பட்டன

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம ஆசாமிகள் சிலர் ஆடுகளை திருடி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளையத்தை சேர்ந்த ஷேக்ரசூல் (வயது 60), தத்தனூர் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (52) ஆகியோர் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையில் ஜெயங்கொண்டம் குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த அழகப்பன் (54), முருகேசன் (43), தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த மகேந்திர வர்மன் (41) அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அரியலூருக்கு காரில் வந்து ஆடுகளை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 19 ஆடுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News