உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே பெண்ணை தாக்கிய கூலி தொழிலாளி கைது
- ஜெயங்கொண்டம் அருகே பெண்ணை தாக்கிய கூலி தொழிலாளி கைது செய்யபட்டார்
- ராம்குமார் அத்து மீறி வளர்மதியின் வீட்டின் உள்ளே நுழைந்து வளர்மதியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மனைவி வளர்மதி (வயது50). இந்நிலையில் இவர் வீட்டில் தனியே இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் (51) என்பவர் (கூலி தொழிலாளி) அத்து மீறி வளர்மதியின் வீட்டின் உள்ளே நுழைந்து வளர்மதியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் கீழே விழுந்த வளர்மதியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றவாரே ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.