உள்ளூர் செய்திகள்
- வியாபாரியிடம் நகை பறிக்கப்பட்டது
- 2 பேர் பைக்கில் வந்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து (வயது60). இவர் 10ஆண்டுகளுக்கு மேலாக பஸ் ஸ்டாண்ட் சாலையில் கூழ் வியாபாரம் செய்து வருகின்றார். நேற்று மதியம் 3 மணி அளவில் அடையாளம் தெரியாத பைக்கில் வந்த 2 பேர், பைக்கை நிறுத்தி கூழ் குடிப்பது போல் பேசிக்கொண்டு அவர் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளி விட்டு தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.