உள்ளூர் செய்திகள்
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடந்தது
- தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது
அரியலூர்
அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் உடையார்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொண்டு, எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகளை தெரிவித்தனர்.